Categories
தேசிய செய்திகள்

“இதோ வந்துவிட்டது” இந்தியாவிலேயே முதன்முறையாக…. திருப்பதியில் சூப்பர் சாதனை…!!

திருப்பதி கோயிலுக்கு சொந்தமான மருத்துவமனை நாட்டிலேயே முதன்முறையாக செயற்கை கைகளை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலையில் ஏழுமலையான் கோயில் உள்ளது. இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோயிலை திருமலை தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வாரி வாரி வழங்கும் நன்கொடைககளால் உலகின் பணக்கார கடவுளாக ஏழுமலையான் திகழ்கிறார். திருப்பதி தேவஸ்தானம் மூலம் நடத்தப்பட்டு வரும் பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் சர்ஜரி ஆராய்ச்சி மற்றும் ஊனமுற்றோர் மறுவாழ்வு(BIRRD) என்ற புகழ் பெட்ரா மருத்துவமனை மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

திருப்பதியில் மருத்துமனை அமைந்துள்ள இந்த மருத்துவமனையின் கலந்தாய்வு அரங்கில் திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் ஒய். வி சூப்பாரெட்டி, தலைமை செயல் அதிகாரி பசாந்த் குமார், மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மதன் மோகன் ரெட்டி ஆகியோர் கலர் கலந்து கொண்ட முக்கியமான கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஆர்த்தோ தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் “பயோனிக் கைகள்” அறிமுகம் செய்யப்பட்டன. இது செயற்கை கைகள் தொடர்பான மருத்துவத்தில் உத்வேக ஒரு புரட்சி என்றே கூறலாம். அதுவும் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கு BIRRD மருத்துவமனை சார்பில் அறிமுகம் செய்து வைப்பது கூடுதல் சிறப்பு என்று சுப்பா ரெட்டி கூறியுள்ளார்.

இந்த பயோனிக் கைகள் முதன்முறையாக ஐதராபாத்தை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணுக்கு பொருத்தப்பட்துள்ளது. இந்த செயற்கை கைகள் ஹைவ் ஆய்வு நிறுவனத்தின் புதிய தயாரிப்பாகும். இந்த நிறுவனம்  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் செயற்கை கைகள் குறித்த பேச்சிலிருந்து உத்வேகம் பெற்று இந்த முயற்சியில் ஈடுபட்டது என்பது குறிப்பிடதக்கது. மேலும் வெளிநாடுகளில் இந்த பயோனிக் கஓக்கள் 30-40 லட்சம் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியாவில் ஒரு கையின் விலை 2.75 லட்சம் மட்டுமே.

மேலும் “பிரணாதானம்” என்ற திட்டத்தின் மூலம் இந்த பயோனிக் கைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்க திட்டமிட்டு வருவதாக சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். இது 8 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கைகளால் நாம் இயற்கையான கைகளால் என்னென்ன செய்ய முடியுமோ அதை அனைத்தும் செய்ய முடியும். இதில் மொபைல் போன் சார்ஜ் செய்து கொள்ளலாம். டார்ச் லைட்டாக பயன்படுத்திக்கொள்ளலாம். பாடல் கேட்கும் பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் உள்ளது. இந்தியாவில் தற்போது முதல்முறையாக பயோனிக் கைகள் செயல்பாடு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |