பைல்ஸ் என்று அழைக்கப்படும் மூல நோய் ஆசனவாயில் மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூல நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் எவ்வாறு சரி செய்வது என்பதை பார்ப்போம்.
நம் உடலில் வெப்பம் அதிகமாகும்போது மூல நோய் ஏற்படுகின்றது. அதிக அளவில் காரம், மிளகு, மிளகாய், இஞ்சி, பாஸ்ட்புட், சிக்கன் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இந்த மூல நோய் ஏற்படுகின்றது. உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு, மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்படும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மூல நோய் குழந்தை பிறந்த பிறகு சாதாரணமாகவே குணமாகிவிடும்.
மூல நோயை எப்படி குணப்படுத்தலாம்:
முள்ளங்கியை சிறிது சிறிதாக நாளுக்குநாள் ஒரு டம்ளர் வரை ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.
மாதுளை தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்தால் நல்லது.
உங்கள் வறட்சியும் பைல்ஸ் அது மிக முக்கிய காரணமாக அமையும். எனவே தினமும் இஞ்சி, எலுமிச்சை நீரில் கலந்து ஜூஸ் போட்டு குடித்து வரவும்.
உலர்ந்த அத்திப்பழத்தை இரவு நேரத்தில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை குடித்து வந்தால் பைல்ஸ் குணமாகும்.
பச்சையாக வெங்காயம் சாப்பிட்டால் மலம் கழிக்கும் போது ரத்த போக்கை சரி செய்யும். இதனால் மலவாயில் ஏற்படும் புண்களும் குணமாகும்.
தானியங்கள், பழங்கள் என அதிக நார்ச்சத்து கொண்ட உணவை சேர்த்துக் கொள்வதாலும் இந்த பைல்ஸ் குணமாகும்.