Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஹிமோகுளோபின் அதிகரிக்க எளிமையான டிப்ஸ்..!!

செலவின்றி எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யலாம்.

ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதனால் அனீமியா ஏற்படுகிறது. இதன் காரணமாக நம் உடலில் பல நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் சோர்ந்துபோய் எதையுமே செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பார்கள். அதே மாதிரி படிக்கும் மாணவர்களுக்கு படிக்க தோன்றாது,தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்குவாங்க. எனவே உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.

எனவே ஹீமோகுளோபின் அதிகரிக்க ஒரு இயற்கையான வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் தண்ணீரில் எடுத்துக் கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மட்டும் மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு காலை ஒரு பழத்தை மட்டும் தின்றுவிட்டு,சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை சாப்பிட்டுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். அதுபோலவே மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை சாப்பிட்டுவிட்டு, மீதியுள்ள நீரை குடித்து விடுங்கள்.

*இரண்டாவது நாளில் காலை 2 ,மதியம் 2, மாலை 2 என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

*மூன்றாவது நாளில் காலை 3, மதியம் 3, மாலை 3 என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

*4 5 6-வது நாட்களில் காலை 4, மதியம் 4, மாலை 4 என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.

*ஏழாவது நாளில் காலை 3, மதியம் 3, மாலை 3 என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

*எட்டாவது நாளில் காலையில் 2, மதியம் 2, மாலை 2 என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

*ஒன்பதாவது நாளில் காலை ஒன்று, மதியம் ஒன்று, மாலை ஒன்று என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பரிசோதித்துப் பாருங்கள். உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும் வலிமையோடும்,  உடல் மிளிரும். தேவையானால் மறுபடியும் இதேபோல் செய்யலாம்.

Categories

Tech |