அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காததும் வருத்தம் அளிப்பதாக மதுரை நீதிமன்ற கிளை நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்
முழுமையாக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களில் இந்த வருடம் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகள் படிக்கக்கூடிய மாணவ மாணவிகளும் பயன்பெற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பல்வேறு மனுக்கள் மாணவ மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை இன்று நீதிபதி கிருபாகரன் – புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது மாணவ மாணவிகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், அரசு பள்ளிகள் அரசுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் கிடையாது. அரசினுடைய முழுமையான விதிகளை பின்பற்றி, அரசினுடைய திட்டங்களை பின்பற்றி, அரசின் உதவிகளை பெற்று தான் இங்கு மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களும் கிராமப்புறங்களிலிருந்து வந்த ஏழை மாணவர்களாக இருக்கின்றனர்.
அவர்களுக்கு உள் ஒதுக்கீட்டில் இடம் வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 86பேருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அவர்களில் இடஒதுக்கீடு தனியார் மருத்துவ கல்லூரிக்கு சென்று விட்டது. நேற்று சில மாணவர்கள் தங்களால் அவ்வளவு பணம் செலுத்தி படிக்க முடியாது என்று, படிப்பே வேண்டாம் என்று சொல்லக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.
இதைக்கேட்ட நீதிபதிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். கடுமையான வேதனைக்கு பிறகு தமிழக அரசின் மிகப்பெரிய முயற்சிக்கு பின்பு அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அனாலும், பணமில்லை கல்வி வேண்டாம் என்று செல்வது மிக வேதனை ஏற்படுத்தி இருக்கின்றது. அவர்களுக்கு அரசு ஒரு உதவி தொகை வழங்கி, படிப்பை தொடர செய்ய வேண்டும்.
இவருடைய கல்வி செலவை முழுமையாக யாரும் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அதிக வசதி படைத்த செல்வந்தர்கள், சினிமா பிரபலங்கள, அரசியல் ஆளுமைகள் இதுபோன்ற குழந்தைகளை தத்தெடுத்து முழுமையாக படிக்க வைக்கலாம், உதவி செய்யலாம் என்ற கருத்து தெரிவித்திருந்தனர். இது குறித்து தமிழக அரசினுடைய வழக்கறிஞரிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டு வழக்கு வருகின்ற 27ஆம் தேதி வெள்ளிக் கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.