விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். இன்று காலை 9:30 மணிக்கு கிண்டியுள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என் ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், என் மீது வாரிசு அரசியல் என்று சிலர் விமர்சனம் வைப்பார்கள், அதை தடுக்க முடியாது. எனது செயல்பாடு மூலமாக அதை நான் முறியடிப்பேன். அதற்கான பணியை தொடர்வேன். பத்திரிகையாளர்கள் அனைவரும் எனக்கு உதவுங்க. என் மேல குறை இருந்தா சொல்லுங்க. உங்களுடைய விமர்சனங்களை வைங்க. அதற்கு தகுந்த மாதிரி என்னுடைய பணிகள் இருக்கும் என வேண்டுகோள் விடுத்தார்.