வேல்ஸ் நாட்டில் சிறிய தொழில் செய்யும் மக்களுக்கு 35 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி வழங்க அரசு தீர்மானித்திருக்கிறது.
கொரோனா பரவல் ஏற்பட்டதால், நாட்டில் சிறிய தொழில் செய்து வந்த மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் 35 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி வழங்கவுள்ளது. எனினும், ஒரு வேலைவாய்ப்பு நிறுவனமானது, ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக தொழிலாளர் சந்தை மீண்டு வர பல வருடங்கள் ஆகும் என்று கூறியிருக்கிறது.
நாட்டின் பொருளாதார துறை அமைச்சர் Vaughan Gething, அரசு வழங்கும் இந்த நிதி உதவியானது, தொழிலை மீட்டெடுக்கவும், கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்கவும் பயனாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அரசாங்கத்தின் இந்த அறிவிப்பிற்கு சிறிய தொழில் மேற்கொள்ளும் பிரதிநிதிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்த நிதியுதவியானது, தொழில் வளர்ச்சி மற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை குறைக்க உள்ளூர் அதிகாரிகளின் மூலமாக கொடுக்கப்படவிருக்கிறது. கொரோனா தொற்றிலிருந்து மீள்வோம் என்னும் நம்பிக்கையில், இனிமேல் மிகுந்த நம்பிக்கையோடு, தொழில்களில் முதலீடு செய்யலாம் என்று உறுதிப்படுத்த இந்த உதவியை அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த நிதியுதவி மூலம் நாட்டின் ஆயிரம் தொழில்கள் பயன்பெறும் என்று தான் நம்புவதாகவும் கூறியிருக்கிறார்.