தொழிலதிபர் தனது குடும்பத்தினருடன் வந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அதிர்ச்சியானது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த யூசுப் அலி என்ற தொழிலதிபர் 1973 ஆம் ஆண்டு தனது மாமாவினுடைய தொழிலை கவனிப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். இவர் தற்போது லூலூ குரூப்ஸ் எனப்படும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 35000 கோடி ஆகும். இவர் கொரோனா சமயத்தில் கேரளாவுக்கு பல வகைகளில் உதவி புரிந்துள்ளார்.
கேரளாவில் நோயாளிகளுக்காக 1400 படுக்கை வசதிகளை கொண்ட மருத்துவ மையம் ஒன்று கட்டி தந்துள்ளார். மேலும் நிதி உதவியும் செய்துள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை பார்ப்பதற்காக யூசுப் அலி தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஒரு ஹெலிகாப்டரில் கேரளாவிற்கு வந்துள்ளார். இவர் வந்த ஹெலிகாப்டர் கேரள மீன்வள பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஹெலிபேடில் தரையிரங்குவதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அப்போது லேசாக மழை தூரியதால் ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனை புரிந்து கொண்ட விமானி சாதுரியமாக குடியிருப்புகளுக்கு அருகே உள்ள புதரில் ஹெலிகாப்டரை தரையிறக்கியுள்ளார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்களின் உதவியுடன் யூசுப் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் “குடியிருப்புக்கு அருகில் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. மேலும் மின்சார கம்பிகள் இருக்கிறது. இந்த விமானி தன்னுடைய சாதுரியத்தால் பத்திரமாக தரையிறங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.