மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருப்பரங்குன்றம், அவனியாபுரம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது.
தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களான ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்த்திரம், ரெட்டியார்பட்டி,வீரகேளம்புதூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. வேலூர் மற்றும் காங்கேயம், வள்ளலார், சத்துவாச்சாரி, காதிப்பட்டறை பகுதிகளால் மிதமான மழை பெய்து வருகிறது.
நெல்லை, பாளையங்கோட்டை, கேடிசி நகர், தச்சநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் காட்டேரி, வெலிங்டன், சேலாஸ் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.