தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக இடியுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 8ம் தேதி முதல் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இதனால் மன்னார் வளைகுடா மற்றும் குமரி வங்க கடலில் 50 கி.மீ வரை காற்று வீசும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வடமேற்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தகவல் அளித்துள்ளது. தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் அதிகபட்ச வெயில் பதிவாகும், இதனால் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்ய வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.