கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது, இதன் காரணமாக கேரளாவின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கையாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு கேரளா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக கொச்சி விமான நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 11-ம் தேதி மாலை வரை கொச்சி விமான நிலையம் தாற்காலிகமாகா மூடப்பட இருப்பதாக கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே தென்மேற்கு பருவமழையால் தான் பேரிடர் ஏற்பட்டது என்பதை கருத்தில்கொண்டு கேரள அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது.