Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி!…. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை…? என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு…..? முழு லிஸ்ட் இதோ…..!!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன் பிறகு சென்னையில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ள நிலையில், மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதோடு, பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் மற்றும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தர்மபுரி, நாமக்கல், சேலம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 24 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப் பட்டுள்ளது. இதேப்போன்று புதுச்சேரி மாநிலத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக அரசை எதிர்த்து அதிமுக பல்வேறு இடங்களில் நடத்த இருந்த போராட்டம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற இருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, இருண்ட பாலிடெக்னிக் கல்லூரியிலும் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் புயல் மற்றும் கனமழையின் போது ஏதாவது அவசர தேவை ஏற்பட்டால் 1913 என்ற மாநகராட்சி உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அதோடு 044-2561 9206, 044-2561 9207 ஆகிய தொலைபேசி எண்களிலும், 94454 77205 என்ற whatsapp எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

Categories

Tech |