வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. இந்த புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக மின்வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புயல் கரையை கடக்கும் போது ஏற்படும் இழப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வதற்கு 25 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், 1.5 லட்சம் போஸ்ட் கம்புகள் மற்றும் மின் உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதன் பிறகு புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் தடைபடும் என்றும், ஆனால் 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்றும் மின்வாரியம் உறுதி அளித்துள்ளது. மேலும் புயல் பாதிப்பு இருக்கும் மாவட்டங்களில் மின்வாரிய அதிகாரிகள் இரவு நேரத்திலும் பணிகளில் இருக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.