Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

11 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை விலக தொடங்கி இருக்கின்றது. கடந்த ஜூன் மாதம் ஆரம்பிச்சு ஜூன், ஜூலை, ஆகஸ்ட்,  செப்டம்பர் என இந்த மாதம் வரைக்கும்,  பல இடங்களில் கனமழை பெய்து முடிஞ்சு இருக்கு. குறிப்பாக தென்னிந்தியாவில் பல மாநிலங்களிலும் அதிக கன மழை பொழிந்துள்ளது. அதிலும் குறிப்பாக சொல்லணும்னா, தமிழகத்தில் இயல்பை விட தென்மேற்கு பருவமழை காலத்தில் ( பொழிய வேண்டி விட இயல்பை விட)  அதிகமாக 51% மழை பதிவாகி இருக்கு.

தென்மேற்கு பருவமழை தென்மேற்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள்ளாக விலகத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையத்தால்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு படிப்படியாக இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் தென்மேற்கு  பருவமழை விலகும் எனவும்,  தமிழகத்தை பொறுத்தவரைக்கும் தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவிக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கு அப்படின்னு வானிலை ஆய்வு மையம் சொல்லியுள்ளார்கள்.

28.09.2022 : தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

29.09.2022 : தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை பொறுத்தவரை : அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 34 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 -27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |