Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பள்ளிபாளையத்தில் பெய்த கனமழை”…. சாலையில் ஆறு போல மழைநீர்…..!!!!!!

பள்ளிபாளையத்தில் மழை நீர் சாலையில் ஆறு போல ஓடியது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக சங்ககிரி சாலையில் சாக்கடை கால்வாய் நிரம்பி சாலையில் ஓடியது. மேலும் விவசாய நிலங்களில் இருந்து வந்த மழைநீர் சாக்கடை கால்வாயில் கலந்து பள்ளிபாளையம் பேருந்து நிலையம் சாலையில் ஆறு போல ஓடியது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதை தொடர்ந்து நகராட்சி மேற்பார்வையாளர்கள் பன்னீர் செல்வம், செங்கோட்டையன் மற்றும் தூய்மை பணியாளர்கள் சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்தார்கள். இதனால் மழை நீர் வடிய தொடங்கியது. இதனால் மழைக்காலங்களில் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

Categories

Tech |