தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு நான்காம் தேதி தமிழகம் வர உள்ளது.
தமிழகத்தில் நிவர் புயல், புரேவி புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு வரும் 4ஆம் தேதி தமிழகம் வருகிறார்கள். அதன்படி நான்காம் தேதி தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்கள். மேலும் ஐந்தாம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்வதாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.