தென்னாப்பிரிக்க அதிபரான ரமபோசா, கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பேரிடர் அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள குவாஜுலு-நேட்டல் என்ற மாகாணத்தில் கடந்த வாரம் முதல் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. எனவே, நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு உண்டாகி குடியிருப்புகள், பள்ளிகள், மின்கம்பங்கள், சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. மேலும், பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கிறது.
குவாஜுலு-நேட்டல் மாகாணத்தில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 443 ஆக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் அதிபர் பேரிடர் அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, பாதிப்படைந்த மக்கள் பாதுகாப்பாக இருப்பது மற்றும் அவரது அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுவது உறுதிப்படுத்தப்படும்.
உடனடியாக மனிதாபிமான நிவாரணம் வழங்குவதில் கவனத்துடன் இருப்போம். மேலும் தங்கள் குடியிருப்புகளை இழந்த மக்களுக்கு சேவைகளை அளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அடுத்ததாக உள்கட்டமைப்பு போன்ற சேதமடைந்த பல்வேறு பகுதிகளை புனரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு செய்வோம் என்று கூறியிருக்கிறார்.