Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் கொட்டி தீர்த்த கனமழை…. பலி எண்ணிக்கை 306-ஆக அதிகரிப்பு…!!!

தென்னாப்பிரிக்காவில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் பலத்த மழை பெய்ததில்  பலி எண்ணிக்கை 306 ஆக அதிகரித்திருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் என்ற கடற்கரை நகர் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சுமார் 60 வருடங்களில் இல்லாத வகையில் அதிகமாக மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதில், துறைமுகம், மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் போன்ற கட்டமைப்புகள் பலமாக சேதமடைந்திருக்கின்றன.

மேலும் வெள்ளம் ஏற்பட்டதில் இழுத்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அந்நாட்டு அதிபர் சிரில் ரம்போசா கூறியிருக்கிறார். மேலும் அவர் இந்த இயற்கை பேரிடர்கள், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கின்றன என்றும் இதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்,

Categories

Tech |