மும்பையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரித்துள்ளது
மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 10 நாட்களாக கொட்டும் கனமழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளித்தது .நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைத நிலையில் அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு மீட்புப்பணி நடைபெற்று வந்தது
கடந்த 10 நாட்களாக பெய்து வந்த மழை இதுவரை இல்லாத அளவுக்கு பதிவாகியுள்ளது .பொதுவாக மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் சராசரியாக 840 மி.மீ. மழை மட்டுமே பெய்யும். ஆனால் இந்த ஆண்டு சற்று அதிகமாக ஜூலை மாதத்தின் தொடக்கத்திலேயே 708 மி.மீ. பதிவாகிவிட்டது அதாவது 84 சதவீதம் மழையை 7 நாட்களிலேயே மும்பை பெற்று விட்டது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி , மும்பையில் இன்றும் நாளையும் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரியவந்துள்ளது. இக்கனமழையால் ஏற்படக்கூடிய சேதத்தை தவிர்க்க மும்பை மாநகராட்சி பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.இதனால் மும்பை வாசிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.