ஜெர்மனியின் கடலோர பகுதிகளில் நேற்று இரவு நேரத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையில் பல பகுதிகள் சேதமடைந்துள்ளது.
ஜெர்மனியில் தொடர்ந்து கனமழை பெய்ததால், அங்கிருக்கும் பல்வேறு பகுதிகளில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், ஹாம்பெர்க் நகரத்தில் இருக்கும் Elbe என்ற நதியின் நீர்மட்டம் 17அடிக்கு அதிகரித்திருக்கிறது.
எனவே அங்கிருக்கும் மீன் சந்தை முழுக்க வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பல பகுதிகளில் தண்டவாளங்களிலும் சாலைகளிலும் மரங்கள் சாய்ந்திருப்பதால், அவற்றை நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விஸ்மர் என்னும் நகரத்தில் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மழை நீடிக்கும் என்றும் ஒரு மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.