Categories
உலக செய்திகள்

சீனாவில் கொட்டி தீர்க்கும் பலத்த மழை…. கிராமங்களில் கடும் வெள்ளப்பெருக்கு…!!!

சீன நாட்டின் தெற்கு பகுதியில் கோடை மழை பலமாக பெய்து வருவதால் ஏழு மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. எனவே சுமார் ஏழு மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு பல்வேறு பகுதிகளில் கடந்த 60 வருடங்களில் இல்லாத வகையில் பலத்த மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.

எனவே, கிராமங்களில் அதிக வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தால் நிலச்சரிவும் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெள்ளத்தில் சிக்கி பாதிப்படைந்த மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |