தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடும் கனமழை பெய்து வரும் நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று கடலூர், விழுப்புரம்,தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு பெய்யும். குறிப்பாக. மதியத்திற்கு மேல் மழை வெளுத்து வாங்கும். எனவே, வெளியே சென்றவர்கள் பாதுகாப்பான இடங்களில் நிற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.