Categories
மாநில செய்திகள்

“கடும் குளிர்” ஒவ்வொரு கூண்டிற்கும் ஹீட்டர்….. உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட சிங்கம்.. புலி.. சிறுத்தை…!!

குஜராத் உயிரியல் பூங்காவில் குளிரிலிருந்து விலங்குகளை  பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்தின்  தலைநகரான அகமதாபாத்தில் விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. இதில் சிங்கம், புலி,சிறுத்தை, உள்ளிட்ட பல்வேறு  வகையான வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது அந்தப் பகுதியில் கடும் குளிர் நிலவி வருவதால் விலங்குகளை  பாதுக்காக்க பல்வேறு நடவடிக்கைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தவகையில் குளிரிலிருந்து விலங்குகளை காப்பாற்றும் பொருட்டு ஒவ்வொரு கூண்டிற்குள்ளும் ஹீட்டர்கள் மற்றும் வைக்கோல் வைக்கப்பட்டுள்ளன. கடும் குளிரால் குறைவாக உணவு எடுத்துக் கொண்ட விலங்குகள்  தற்பொழுது நடவடிக்கைகளுக்குப் பின்னர் வெப்பமான சூழ்நிலை நிலவுவதால் அதிக உணவு சாப்பிடுவதாக விலங்கியல் பூங்காவின் இயக்குனர் ஆர்.சாத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |