பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆலத்தூர் ரெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பழனி என்கிற சின்னத்தம்பி. சம்பவத்தன்று இவர் வீட்டின் பக்கத்தில் பச்சிளம் ஆண் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதி மட்டும் துண்டாக வெட்டப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உடனே அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கூப்பிட்டு காண்பித்துள்ளார். எனவே அனைவரும் அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஆலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழ் முருகனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் காவல் நிலையத்திற்கு அந்த கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இடுப்புக்கு கீழ் பகுதியான பாதி உடல் மட்டும் கிடந்த அந்த ஆண் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த கொடூரமான செயலை செய்தது யார்? என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பச்சிளங்குழந்தை மீதமுள்ள பகுதி எங்கு கிடக்கிறது? என்றும் தேடி வருகின்றனர். கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை பெற்றோர்கள் கொன்று விட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எந்த பாவமும் செய்யாத இந்த பச்சிளம் ஆண் குழந்தையை இரண்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்துவிட்டு பாதி உடலை வீசி சென்ற கொடூரம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.