Categories
தேசிய செய்திகள்

1,36,058 பேர் மரணம்….. இளைஞர்களே எச்சரிக்கை…… வெளியான அதிர்ச்சி தகவல்….!!

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

மாரடைப்பு என்பது முன்பெல்லாம் முதியவர்களை தாக்கக்கூடிய ஒரு நோயாக கருதப்பட்டது. ஆனால் தற்போது உணவு முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டதால், இளைஞர்களும் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மாரடைப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 18 முதல் 40 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது. எனவே இளைஞர்கள் உட்கார்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் வேலையை செய்தாலும், அவ்வப்போது கடின உழைப்பை போடும் விதமாக உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும், முடிந்த அளவுக்கு சத்தான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Categories

Tech |