மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம், இந்த அறிக்கையில் சசிகலா தவறிழைத்திருக்கின்றார் என புரிந்து கொள்ள முடியாது. ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கை என்பது ஒரு உண்மை கண்டறியும் கமிட்டி. அதாவது முன் பின்னாக நடந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவது விசாரணை மூலமாக வெளிக் கொண்டு வந்து, அரசுக்கு தந்திருக்கிறது.
அரசு இனிமேல் வந்து சட்டத்துறைக்கு அனுப்பி கருத்து கேட்டு அவர்கள் தேவைப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை, ஒரு தனிப்படை அமைக்கலாம். இதற்கு முன்பு வந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய வரலாறுகள் எல்லாம் இருக்கிறது, அப்படி தனிப்படை அமைத்தால் இது வந்து ஒரு கிரிமினல் நடவடிக்கையாக மாறும், நீங்கள் கூறுவது போல குற்றவாளிகள் ஒன்று, இரண்டு அந்த வரிசை வரும்.
2016 டிசம்பர் மாதம் 4-ம் தேதி ஜெயலலிதா அவர்களின் இதயம் நின்று விட்டது, அதற்கு பிறகு இப்போது மருத்துவ நடைமுறைகளின் படி எக்மோ கருவி மூலமாக இதயத்தை இயக்க வைப்பதற்கான முயற்சி எல்லாருமே நடத்துகிறார்கள். எனவே 5-ம் தேதி இரவு என்று அந்த அறிக்கையில் இறந்த நேரத்தை குறிக்கப்பட்டு இருக்கிறது. அதிலே குழப்பங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான், இது குறித்த பல விவாதங்களில் நானும் சில மருத்துவ நிபுணர்களும் கலந்து கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் பின்னாலே நடைபெறுகின்ற கிரிமினல் விசாரணை தெளிவுபடுத்தும் என்று நான் நினைக்கிறேன்.