Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பீட்ரூட் புலாவ் – இரத்த சிவப்பணு அதிகரிக்க சாப்பிடுங்கள்!

பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும் கண்களுக்கு பார்வை திறனை அதிகரிக்கிறது. பீட்ரூட் சாறு செரிமான கோளாறை நீக்கி இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். இத்தகைய குணங்கள் கொண்ட பீட்ரூட் ரெசிபிக்களை வீட்டில் எளிதாக செய்வது குறித்து இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் – 1,
பாஸ்மதி அரிசி – அரை கிலோ,
கொத்தமல்லி இலை, புதினா இலை – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 1,
இஞ்சி,பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
வெங்காயம் – 1,
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
பட்டை – ஒரு சிறுதுண்டு,
கிராம்பு – 2,
ஏலக்காய் – 3,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை : 

அரிசியை நன்றாகக் கழுவி அரை மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். பீட்ரூட்டை நறுக்கி தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்து வைக்கவும். அரைத்த பீட்ரூட் உடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், சோம்பு, கிராம்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். வதங்கியதும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதில் அரைத்து கலந்து வைத்திருக்கும் பீட்ரூட் தண்ணீரை ஊற்றி, கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியைப் போட்டு, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கவும்.

Categories

Tech |