நீரிழிவு நோயாளிகள் தங்களது உடலை பாதுகாத்துக் கொள்ள ஒரு சில டிப்ஸ்கள் இதோ,
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வயிறு நிரம்ப சாப்பிடுவதற்கு பதிலாக சிறுக சிறுக 6 வேளையாக உணவை எடுத்துக் கொள்ளலாம். அதே போல் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட்டு முடித்து விடுவது நல்லது. இரவில் சாப்பிட்டு முடித்த பின்பும் பசி ஏற்பட்டால் பால் அல்லது சத்து மிகுந்த பழங்களை இரவில் எடுத்துக் கொள்ளலாம். அது ஜீரணமாவதுடன் ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும்.