காரசாரமான பொடி இட்லி செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
தேவையானவை :
இட்லி மாவு – 2 கப்,
கருவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – சிறிதளவு,
கடுகு – கால் டீஸ்பூன்,
இட்லி மிளகாய்ப்பொடி – 3 டேபிள் ஸ்பூன்,
செய்முறை :
இட்லி மாவில் குட்டி குட்டியாக இட்லிகளை தயார் செய்து, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்க வேண்டும். அதன் பின் வெறும் கடாயில் கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
அதன்பின் இட்லி மிளகாய்ப் பொடியுடன் உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கரைசலாக மாற்றி அதில் சிறு சிறு இட்லிகளை பிரட்டி எடுத்து கடாயில் போட்டு சிறிது வதக்கி பின் பரிமாறினால் சுவையான பொடி இட்லி தயார்.