Categories
Uncategorized

” ஆரோக்கியம் + சுவை ” மொறு… மொறு…. அவுல் தோசை தயார்…!!

சுவையான அவல் தோசை செய்வது எப்படி என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.

தேவையானவை :

பச்சரிசி- ஒன்றரை கப்,

 புழுங்கல் அரிசி- அரை கப்,

 அவுல் – அரை கப்,

 உளுந்து – கால் கப், 

வெந்தயம் – அரை டீஸ்பூன்,

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை : 

பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய நான்கையும் ஒரு பாத்திரத்தில் தனியாகவும், அவுல்  மட்டும் மற்றொரு பாத்திரத்தில் தனியாகவும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நன்கு ஊற விடவேண்டும். பின் நீரை வடிகட்டி அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

பின் மாவு கலவையில் உப்பு சேர்த்து கைகளால் கலக்கி புளிக்க விடவும். பின் அதில் சர்க்கரை சேர்த்து கலந்து பின் அடுப்பில் மிதமான சூட்டில் தோசைக்கல்லை வைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி ஊத்தப்பம் போல் பெரிதாக வார்த்து மூடியால் மூடவேண்டும். வெந்த பின் அதனை திருப்பி போடாமல் அப்படியே எடுத்து தட்டில் வைத்தால்  அருமையான அவுல் தோசை ரெடி.

Categories

Tech |