தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ட்விட் செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. தமிழக அரசின் உத்தரவின் படி இதனை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பதாக ட்விட் செய்துள்ளார்.
இந்தநிலையில் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 5 பேரில் 4 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.