பிரிட்டனில் சுகாதார மந்திரி, பெண் உதவியாளருக்கு முத்தமிட்ட புகைப்படத்தை எடுத்தது யார்? என்று விசாரணை நடத்த அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரிட்டன் சுகாதார செயலாளராக இருந்த மாட் ஹான்காங்க், பெண் உதவியாளருக்கு முத்தமிட்ட புகைப்படத்தை பிரபல ஊடகம் வெளியிட்டிருந்தது. அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது கடந்த வருடம் கொரோனா பாதித்து, பிரிட்டனில் பல மக்கள் பலியாகினர். அந்த சமயத்தில் பொதுமுடக்கம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற அதிபர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டிருந்தார்.
அதை மீறினால் அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சரே சமூக இடைவெளியை விதியை கடைபிடிக்காமல் இவ்வாறு செயல்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மக்களிடமும் பிரதமரிடமும் மாட் ஹான்காங் மன்னிப்பு கேட்டதோடு பதவியிலிருந்து விலகினார்.
இந்நிலையில் அவர் உதவியாளருக்கு முத்தமிட்ட புகைப்படத்தை அலுவலகத்திற்கு சென்று யார் எடுத்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்த பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் அமைச்சர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.