தோனி மற்றும் விஜய் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தளபதி ரசிகர்கள் சர்ச்சைக்குரிய போஸ்டராக மாற்றியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டிக்கான பிரபல கிரிக்கெட் வீரர் தோனி சென்னை வந்துள்ளார்.
நேற்று நடிகர் விஜயும், தல தோனியும் ஒருவருக்கொருவர் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் நேற்று இணையத்தில் மிகவும் வைரலாக பரவியது. இந்நிலையில் தளபதி ரசிகர்கள் சிலர் தல தோனி MP என்றும் தளபதி விஜய் CM என்றும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இந்த சர்ச்சைக்குரிய போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.