திரையரங்கில் ‘வலிமை’ திரைப்படத்தை மட்டும்தான் முதலில் பார்ப்போம் என அஜித் ரசிகர்கள் உறுதிமொழி எடுத்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் பரவலின் காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு படங்கள் இறுதிகட்ட பணிகள் முடிந்தும் வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா நடித்த “சூரரை போற்று” திரைப்பட பணிகள் முடிவடைந்து நான்கு மாதங்கள் ஆகியும் வெளியாகாமல் இருந்தது. வருகின்ற அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இச்சூழலில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அவர் நடித்து வெளியாக தயாராக இருக்கும் “வலிமை” திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் வரை வேறு எந்த படங்களையும் திரையரங்குகளிலோ அல்லது ஓடிடி தளத்திலோ பார்க்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்று, மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். மதுரை முழுவதும் ‘அடங்காத அஜித் குரூப்ஸ்’ என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.