Categories
அரசியல்

சுற்றுபயணத்தில் வெற்றி கண்ட முதல்வரே…. ஏ.சி.சண்முகம் வாழ்த்து..!!

வெளிநாட்டு சுற்று பயணத்தை மேற்கொண்டு  வந்துள்ள முதல்வரை புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு அன்னிய முதலீட்டை  மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.  தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இத்தகைய தொழில் பயணத்தை முதல்வர் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for ac sanmugam

முதல்வரின் இப்பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த ஆதரவு கட்சிகள் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், வேலூர் மக்களவை தேர்தலின் வேட்ப்பாளரும்  புதிய நீதி கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம்  வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்துள்ள முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |