இந்த ஐபிஎல் தொடரின் தொடர்ந்து சொதப்பி வரும் கேதார் ஜாதவை ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றார்கள்.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்து இலக்கை நிர்ணயித்தது கொல்கத்தா. 168 ரன்கள் என நிர்ணயித்த இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதக சேஸ் செய்து விடலாம் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சென்னை அணியில் இந்த தோல்வி ரசிகர்களை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது.
முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சென்னை அணி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து பிறகு வெற்றியை சந்தித்த நிலையில் ஆறாவது போட்டியான நேற்று மீண்டும் தோல்வியை தழுவியது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது அதுமட்டுமல்லாமல் அணியில் தேர்வு குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் சரியாக விளையாடாமல், சொதப்பி வரும் கேதர் ஜாதவ் எதற்காக அணியில் வைத்துள்ளார்கள் ? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு, வீடியோக்களையும், போட்டோஷாப் பதிவுகளையும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் ஒரு ரசிகர் ஒருவர்… கேதார் ஜாதவ் தோனிக்கு சாப்பாடு ஊட்டி விடுவது போன்று ஒரு வீடியோவை பதிவிட்டு.. சென்னை அணியில் அவருக்கு இது தான் வேலை என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
The Only Reason Why Kedar Jadhav In CSK Team 🙂🤙#CSKvsKKR #IPL #ChennaiSuperKings #Jadhav #Jadeja pic.twitter.com/ldnNXTbyad
— Kundan Singh (@SinghSaab1506) October 7, 2020