திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, இந்த ஆட்சியை சாய்க்க நினைக்கிறார்கள். ஆட்டுக்குட்டிகளை பேசி இந்த மேடையை நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை. ஆனால் இன்றைக்கு ஆட்டி குட்டி பேசியது… அவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா ? இவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா ? என்றான்.
நிச்சயம் அடுத்த நிகழ்ச்சி வரும். அந்த நிகழ்ச்சி வருகின்றபோது பாஜகவின் தலைவர் என்று யாராவது கேட்டால், நானும் கேட்கலாமா அவனா ? இவனா என்று ? கேட்டால் எங்களுக்கு நாகரிகம் சொல்வார்கள். நீங்கள் என்ன பொருளை எடுக்க வேண்டும் என்று எங்களை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள் தோழர்களே..
கலைஞர் அவ்வளவுதான், கலைஞர் போய்விட்டால் இயக்கம் இருக்காது என்று சொன்னான். இயக்கம் இருந்தாலும் கொள்கை இருக்காது என்று சொன்னான். கொள்கை எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள் ? அவர் துண்டு சீட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னார்கள். ஆம்..! துண்டு சீட்டு வைத்து படிக்கிறார். அவருக்கு எதுவும் தெரியாது முதலமைச்சர் ஆக முடியாது என்று சொன்னார்கள்.
ஆம் நண்பர்களே..! அவர் துண்டிச்சிட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னவன் எல்லாம், இன்றைக்கு சொல்கிறான். யப்பா இந்தியாவிற்கே திராவிட மாடல் என்கின்ற துருப்புச்சீட்டு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற மாபெரும் தலைவன் என்று சொல்கிறான்.
அவருக்கு ஒண்ணுமே தெரியாது, அவருக்கு பேசவே தெரியாது என்று சொன்னவர்கள் எல்லாம், வாயையும் எல்லாவற்றையும், நவ துவாரங்களையும் அடக்கி கொண்டு சொல்கிறார்கள்.. ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதியென்று என தெரிவித்தார்.