நான் பணியாற்றிய இயக்குனர்களில் தலைசிறந்த ஒருவர் கார்த்திக் சுப்புராஜ் என்று தனுஷ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதை தொடர்ந்து இவர் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கி வந்தார். அதன் பிறகு ரஜினியின் பேட்ட படத்தை இயக்கி மிகவும் பிரபலமான இயக்குனரானார்.
இவர் தற்போது தனுஷ் நடிப்பில் “ஜகமே தந்திரம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னணி நடிகர் தனுஷ் ட்விட்டர் மூலமாக கார்த்திக் சுப்புராஜ் இருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் நான் பணியாற்றிய இயக்குனர்களில் தலைசிறந்த ஒருவர் கார்த்திக் சுப்புராஜ் என்றும் தொடர்ந்து வெற்றி அடையுங்கள் என்றும் வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.
Wishing you a very happy birthday @karthiksubbaraj you are easily one of the best directors I have worked with. Keep rocking. God bless
— Dhanush (@dhanushkraja) March 18, 2021