என்னதான் கருணாநிதியை நீங்கள் ஆத்திரமாக திட்டினாலும் நேருக்கு நேர் சந்தித்தால் எந்த பெரிய மனிதரும் அவரிடம் சரணாகதி அடைந்து விடுவார்கள் கருணாநிதி குறித்து கண்ணதாசன் கூறிய வார்த்தைகள் இவை. அப்படி எழுதிய கண்ணதாசன் சரணாகதி அடைந்த இடம் தான் கருணாநிதியின் நட்பு. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருக்கும்போதுதான் நடிகர் எம் ஜி சக்கரபாணி தொடர்பு கண்ணதாசனுக்கு கிடைத்தது. சக்கரபாணி மூலம்தான் கருணாநிதி என்கிற பெயர் கண்ணதாசனுக்கு அறிமுகமானது. சக்கரபாணி ஒருநாள் சேலம் அம்பிகா தியேட்டருக்கு கண்ணதாசனும் சக்ரபாணியும் அபிமணியே படம் பார்க்க போனார்கள். அந்த படத்தின் வசனங்களைக் கருணாநிதி எழுதியதாகச் சக்கரபாணி சொன்னார்.
அந்த வசனங்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்பும் கண்ணதாசனின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல தொடர்ந்து ஆறு நாட்கள் சேர்ந்தார் போல அந்த படத்தை கருணாநிதியின் வசனத்திற்காகவே கண்ணதாசன் பார்த்தார். காணாமலே காதல் என்பது போல வசனங்கள் மூலம் கருணாநிதியின் மீது கண்ணதாசனுக்கு காதல் பிறந்துவிட்டது. இப்படி பார்க்காமலேயே கருணாநிதி எழுத்துக்கள் மூலம் காதல் வயப்பட்டார் கண்ணதாசன்.சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் மந்திரிகுமாரி படத்தில் வசனம் எழுதுவதற்காக மாதம் 500 ரூபாய் சம்பளத்திற்கு கருணாநிதி வேலைக்கு அந்த தருணம் அங்கே உள்ள இடத்தில்தான் சீனிவாசன் மூலம் கருணாநிதி கண்ணதாசன் சந்திப்பு நிகழ்ந்தது. வசனங்கள் மூலம் ஏற்கனவே கருணாநிதி மீது காதல் வயப்பட்டு இருந்த கண்ணதாசனுக்கு ஒரு காதலியைக் காணும் உணர்வு எழுந்தது.
அந்த சந்திப்பிற்கு பிறகு கருணாநிதியின் கண்ணதாசனும் உயிருக்குயிராக நேசிக்கத் தொடங்கினர். ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்து உறங்க அளவிற்கு பாசம் வளர்ந்தது. ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கமானவர்கள். அரசியல் சூழலில் பெரியாரின் திராவிட கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அரசியலில் நுழைந்தார் கண்ணதாசன். தந்தை பெரியார் மீதும் அறிஞர் அண்ணாவின் மீது மிகுந்த பற்று உடையவராக இருந்தார். அவரது அரசியலுக்கு உழவர்கள் அண்ணாவும் கருணாநிதியும் தான் பொள்ளாச்சியில் நடந்த திராவிட கூட்டத்தில்தான் கண்ணதாசனின் முதல் மேடைப்பேச்சு அரங்கேறியது.
திமுக மேல் நோக்கிப் போன பொழுதே எம்ஜிஆருக்காக அச்சம் என்பது மடமையடா என்பது போன்று கருத்துச் செறிவான கொள்கைப் பாடல்களை எழுதினார். பின் திமுகவுடன் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளால் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். இதனால் கருணாநிதியுடனான நட்பு முறிந்தது. எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகிய சமயத்தில் முக்கியமான தருணங்களை பகிர்ந்து கொண்டார். இதை கண்ணதாசன் தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பின் சேலத்தில் தொடங்கிய நட்பு ஒரு கவிதை நிகழ்ச்சியின் மூலமாக மீண்டும் சேலத்திலேயே உயிர்பெற்றது. கண்ணதாசன் விரும்பிய அரசியல் தலைவர்கள் அதிக நெருங்கிய பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு வருபவர்கள் என அனைவரையும் பிற்காலத்தில் அதிகம் விமர்சனம் செய்தவர். இவை யாவுமே அவரை அரசியல் களத்தில் நிலைநிறுத்த முடியாமல் செய்தன.