செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மின் கட்டண உயர்வுக்கு இந்திய ஒன்றிய அரசினுடைய அழுத்தம் காரணம் என்கிறார்கள். ஆனால் தம்பி அண்ணாமலையும் மின்கட்டண உயர்வை எதிர்த்து போராடிட்டு இருக்காரு. தம்பி அண்ணாமலைக்கு என்ன பேசுறதுன்னு தெரியல ?
அப்பப்போ ஏதோ பேசி பார்க்கிறார். அது எல்லாம் வேடிக்கையாகிறது. சும்மா எதாவது சொல்லனும்னு திமுக மீது பழி போடுறாரு. திமுக தான் காரணம்னு சொல்றாரு. லாரி லாரி கொண்டு விக்கிறது எல்லாம் பெரியார் மண்ணு தானா அப்போ. கன்னியாகுமரி எல்லாம் மலை குடைந்து, நொறுக்கி விழிங்கம் துறைமுகம் கட்டுவதற்கு விக்கிறது எல்லாம் பெரியார் மண்ணு தானா… அதான் இந்த திமிர்ல பேசுறது.
பெரியார் மண்ணு, பெரியார் மண்ணு என சொல்லுறீங்க. இது ஏன் எங்க முன்னோர்கள் சேர, சோழ, பாண்டியர் மன்னன் மண் என்று சொல்லப்பட மாட்டேங்குறீங்க ? பெரியார் மண்ணு, பெரியார் மண்ணு என சொல்றீங்க. சாக வகுப்பு நடத்த அனுமதி கொடுக்கிறது பெரியார் மண்ணு. ஆர்எஸ்எஸ் கூட்டம் போடுவதற்கு அனுமதிக்கிறது பெரியார் மண்ணு. இந்த மண்ணையே வாய்க்குள்ள வச்சு திணிச்சி கொல்ல வேண்டியது தான் ஒரு நாள் என காட்டமாக விமர்சித்தார்.