கவிஞர் வைரமுத்து உலக நாயகன் கமலஹாசனின் 61 ஆண்டு திரையுலக பயணத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
திரையுலகிற்கு வந்து 61 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார் கமலஹாசன். களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக 1959ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன்பின் திரையுலகில் பன்முக திறமைகளை வெளிப்படுத்தி உலக நாயகன் ஆனார். அரசியல் கட்சியில் தற்போது தலைவராக உள்ளார். இவரின் 61 ஆம் ஆண்டு சினிமா பயணத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் திரை உலக பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து கமல் குறித்து “பரமக்குடியின் அருமை கலைஞர். பிறப்பு சிவப்பு; இருட்டு கருப்பு. மரபு கடந்து புதுக்கவிதை புரிதல்கள் கடிது; இனிது. ஆண்டுகள் 60 காய்ந்த பின்னும் நனிகனி குலுங்கும் தனி விருட்சம். கலைத்தாய் தன் நெற்றியில் மாற்றி மாற்றி சுடுவது திலகத்தையும் இவர் பெயரையும் கலையாக் கலையே கமல்” என்று பதிவிட்டுள்ளார்.