Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அவருக்கு எந்த நெருக்கடியும் இல்ல” பவுலர்கள் ஜாக்கிரதை…. எச்சரித்த இர்பான் பதான்….!!

ஐபிஎல் போட்டியில் தோனிக்கு எதிராக பந்து வீசுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என இர்பான் பதான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாட உள்ளார். சர்வதேச போட்டியில் மீண்டும் விளையாட முடியுமா? என்ற நெருக்கடி அவருக்கு தற்போது விலகியுள்ளது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார்.

எனவே தோனி மிகுந்த ஆக்ரோஷத்துடன் இருப்பார் ஜாக்கிரதை என இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ” அனைத்து பந்துவீச்சாளர்களும்  சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி போன்றவர்களுக்கு பந்துவீச விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் தோனி முழு உத்வேகத்துடன் உள்ளார். நான் அத்தருணத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். அனைத்து பந்துவீச்சாளர்களும்  கவனமாக இருக்க வேண்டும். சி.எஸ்.கே அணிக்காக விளையாடும் போது மிகவும் அனுபவித்து விளையாடுவார். பேட்ஸ்மேனாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு 416 ரன்கள் அடித்தார். இதுவரை 190 போட்டிகளில் விளையாடி 4432 ரன்கள் அடித்துள்ளார்.”

Categories

Tech |