Categories
சினிமா தமிழ் சினிமா

“எதற்கும் துணிந்தவன்”…. சூடு பறக்க சமைக்கும் சூர்யா….. வைரலாகும் அன்சீன் புகைப்படம்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர் களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமான நபர் ஆவார். ஏனெனில் நடிகர் சூர்யா பிரபலத்தின் மகனாக இருந்த போதிலும் தனக்கான இடத்தை பிடிப்பதில் நிறைய போராட்டங்களை சந்தித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் தேசிய விருது பெற்றது. இந்த படத்திற்கு அடுத்தடுத்து ஏராளமான விருதுகளுக்கு குவிந்தது.

அதன்பிறகு ஃபிலிம் பேர் விருது வழங்கும் விழாவின்போது என்னுடைய வாழ்க்கையில் சில விஷயங்கள் சரியாக நடக்காத போது, சூரரைப் போற்று திரைப்படம் ஒரு நல்ல மருந்தாக அமைந்துள்ளது என்று சூர்யா மனம் உருகி கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் அன்சீன் புகைப்படம் ஒன்றினை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

அந்த புகைப்படத்தில் தன்னுடைய வீட்டில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து நடிகர் சூர்யா சமைத்துக் கொண்டு இருப்பது போல் இருக்கிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திரையில் பெரிய ஹீரோவாக இருந்தாலும் வீட்டில் குடும்பத்தினருக்காக நன்றாக சமைக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/Ck50UL_pbJK/?utm_source=ig_embed&ig_rid=1d42e47d-2e27-44b8-8e2a-d31de4e3e96c&ig_mid=0E706AB0-AF55-4C11-9CD4-531E62E0841C

Categories

Tech |