இந்தியா முழுவதும் 2000 கிளைகளை அமைப்பதற்கு ஹெச்டிஎப்சி வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று எச்டிஎப்சி வங்கி. தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வகையில் வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வங்கி தனது சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள மக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்குவதற்கு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நிறைய வங்கி கிளைகளை திறப்பதற்கு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து எச்டிஎப்சி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான சசிதரன் ஜெகதீசன் தெரிவித்ததாவது “அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 1,500 முதல் 2,000 வங்கி கிளைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.ஹெச்டிஎஃப் வங்கியுடன் ஹெச்டிஎஃப்சி நிறுவனம் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் பங்குதாரர்களுக்கு ஜகதீசன் கடிதம் அனுப்பியுள்ளார். எச்டிஎஃப்சி வங்கி தற்போது மொத்தம் 6000 வங்கிக் கிளைகளை கொண்டுள்ளது.
இதோடு ஒவ்வொரு ஆண்டும் 2000 வங்கி கிளைகளை புதிதாக திறக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த வங்கி கிளைகள் இப்போது இல்லை எனவும், அதை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதன் பயன்களும் அதிகமான அளவில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.