கணவனை இழந்த பெண் ஒருவருக்காக இரு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சண்டை இட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கெரி மாவட்டத்தை சேர்ந்த சர்ஜித்குமார் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இதையறிந்து அங்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரின் செல்போனை பரிசோதனை செய்தபோது, அவர் அடிக்கடி ஒரு பெண்ணிடம் பேசி இருந்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணை விசாரித்ததில் பல உண்மைகள் வெளிவந்தது.
அந்தப்பெண் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதாகவும், வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் இருந்து வந்த நிலையில் கணவனின் உறவினரான சர்ஜித் மட்டும் ஹர்பால் ஆகிய இருவரும் எனக்கு உறுதுணையாக இருந்ததாகவும், இருவரும் என்மீது பாசமாக இருந்ததால்தான் இருவரையும் காதலித்ததாகவும் அவர் கூறினார்.
சம்பவ தினத்தன்று நான் ஹர்பாலுடன் உல்லாசமாக இருந்தபோது சர்ஜிக்கும் அங்கு வந்தார் இதனை கண்ட சர்ஜித் மற்றும் ஹர்பால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ஹேர்பால் சர்ஜித்தின் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர், ஹேர்பால்ம், நானும் சேர்ந்து அருகில் உள்ள கிராமத்தில் தூக்கி எறிந்தோம்” என்று அவர் தெரிவித்தார்.