Categories
தேசிய செய்திகள்

ஹரியானாவில் கல்லூரி மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – தாக்குதல் நடத்திய இருவர் கைது…!!

ஹரியானாவின் பலாபாக் பகுதிகளில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்திற்கு உட்பட்ட பலாபாக் பகுதியில் உள்ள கல்லூரியிலிருந்து மாணவி ஒருவர் நேற்று தேர்வு எழுதிவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது காரில் சென்ற இருவர் அந்த மாணவியை காதுக்குள் இழுத்து கடத்த முயன்றனர்.

அவர்களிடமிருந்து மாணவி தப்பிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். படுகாயமடைந்த  மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்டித்து மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |