பிரிட்டன் Hartlepool தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சியை வீழ்த்தி கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
பிரிட்டன் Hartlepool தொகுதியின் தொழிலாளர் கட்சி எம்பி எம்.பி மைக் ஹில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு காரணமாக கடந்த மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மே 6ம் தேதி கவுன்சில்களுக்கான தேர்தலுடன் Hartlepool தொகுதியின் இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் இன்று Hartlepool தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் தொழிலாளர் கட்சி வேட்பாளர் Paul Williams 8,589 (29%) வாக்குகள் பெற்ற நிலையில் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் Jill Mortimer 15,529 (52%) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனிடையே தொழிலாளர் கட்சி 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற எம்.பி Jill Mortimer நேர்மையாக பணியாற்றுவேன் என்றும் தொகுதி மேம்படுவதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன் என்றும் உறுதியளித்தார். இந்நிலையில் வெற்றிபெற்ற கன்சர்வேடிவ் கட்சி பிரதமர் போரிஸ் ஜான்சனின் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.