ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் அளித்துள்ளார் .
சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு சமீபத்தில் நடந்து முடிந்த 14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா முழு பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்பட்டார் .அப்போட்டியில் ஒரு ஓவர் கூட பந்து வீசவில்லை . அதேசமயம் டி20 தொடரில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக போட்டியில் பந்துவீசிய ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை .
அதோடு பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியின்போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் உடல் தகுதி காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் இடம்பெறவில்லை .இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறும்போது,” ஹர்திக் பாண்டியா நல்ல கிரிக்கெட் வீரர் .காயம் காரணமாக தற்போது நல்ல உடல் தகுதியில் அவர் இல்லை .இதனால்தான் அவர் அணியில் இடம்பெறவில்லை .அதோடு காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு அவர் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.