கொரோனா வைரஸ் நீண்ட நாளுக்கு நம் நாட்டில் இருக்கும் நாம் தான் நம் வாழ்வியல் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகழுவுதல், உள்ளிட்டவற்றை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்தபோதிலும், சிறுசிறு அலட்சியங்களால் நோய் பரவல் என்பது அதிகமாக ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், பெரியம்மை, போலியோ உள்ளிட்ட ஒரு சில நோய்களை தவிர மற்ற வைரஸ் நோய்கள் முற்றிலுமாக நம் நாட்டில் அழிக்கப்படவில்லை.
அதேபோல்தான் இந்த கொரோனா வைரஸும் நம் நாட்டில் நீண்ட நாள்கள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த நோய் பரவல் தாக்கம் குறைய நீண்ட நாள்கள் ஆகும். ஒரேடியாக அழித்துவிட முடியாது. ஆகவே, நாம் தான் நம் வாழ்வியல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர, கொரோனா விரைவில் போய்விடும் என்ற எண்ணத்தில் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.