அமெரிக்காவில் பழைமை வாய்ந்த மாடி கட்டிடம் ஒன்று வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வண்டி மூலம் நகர்த்தப்பட்ட காட்சி அப்பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள விக்டோரியன் ஹவுஸ் 139 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 1882 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடு, கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேறொரு இடத்திற்கு ட்ரக்கின் மூலம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை பலர் ஆர்வமுடன் வேடிக்கை பார்த்தனர். ஒரு குடியிருப்பு பகுதியை கட்ட இடம் கொடுக்கும் வகையில், 6 ப்ளாக்குகள் தள்ளி ஒரு புதிய இடத்திற்கு இந்த வீடு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த ஹவுஸ் மூவவிங் பணியை மேற்கொண்ட பில் ஜாய், இந்த இடம் மாற்றத்திற்காக 200,000 டாலர் செலவானது என்று கூறியுள்ளார். மேலும் இதற்கு 15 நகரங்களில் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்தார். மணிக்கு சுமார் ஒரு மைல் என்ற வேகத்தில் நகர்ந்த இந்த 2 மாடி கட்டிடத்தை ஏராளமானோர் கண்டு களித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அப்பகுதியில் சில நேரம் இது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.