Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி – அருண் விஜய் படத்தில் இணைந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலம் … வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் அருண் விஜய் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .

தமிழ் திரையுலகில் சாமி, சிங்கம், வேல், பூஜை போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் . மேலும் யோகிபாபு ,பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ‘கேஜிஎஃப்’ பட நடிகர் ராமச்சந்திர ராஜு ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர் . இந்நிலையில் இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் புகழ் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் .

Categories

Tech |